இராமநாதபுரம்

ராமேஸ்வரம் தாலுகா சர்வேயர் லஞ்சம் வாங்கியபோது கைது

ராமேஸ்வரம் தாலுகா சர்வேயர் லஞ்சம் வாங்கியபோது கைது

இராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த சர்வேயர் சத்யராஜ், லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

நிலத்தின் உட்பிரிவு பட்டாவை அளந்து, அளவீட்டு விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து தருவதற்காக ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் பொறிவைத்து கண்காணித்தனர்.

தாலுகா அலுவலகத்தில் வைத்து புகார்தாரரிடம் இருந்து ரூ.5,000 லஞ்சப் பணத்தை சர்வேயர் சத்யராஜ் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் அவரை பிடித்தனர். லஞ்சப் பணமும் மீட்கப்பட்டது.கைது செய்யப்பட்ட சத்யராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button