கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: ராமநாதபுரம் எஸ்.பி நடவடிக்கை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: ராமநாதபுரம் எஸ்.பி நடவடிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாலமுருகன்( எ) பல்லுபாலா என்பவரை தேவிபட்டினம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருந்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு. சிவகுரு பிரபாகரன், IAS., அவர்கள் பாலமுருகனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்.
எஸ்.பி எச்சரிக்கை
மேலும் இது போன்ற சட்டவிரோத கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS., எச்சரித்துள்ளார்.




