கடல் அலையே சாலையான கீழக்கரை கடற்கரை காவல் நிலையம்!!

கடல் அலையே சாலையான கீழக்கரை கடற்கரை காவல் நிலையம்!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள கடற்கரை காவல் நிலையத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் காவல்துறையினரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கடலோர பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட இந்த காவல் நிலையத்திற்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் புகார் கொடுக்க வரும் பொதுமக்களும், பணிக்கு செல்லும் காவலர்களும் கடல் அலைகளை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. மழைக்காலங்களிலும், கடல் சீற்றம் உள்ள நாட்களிலும் நிலைமை இன்னும் மோசமாகிறது.அவசர காலங்களில் காவல்துறையினர் விரைந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.குற்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. பொதுமக்களும் பாதுகாப்பின்றி கடல் நீரில் நடந்து செல்கின்றனர்.
எனவே கடற்கரை காவல் நிலையத்திற்கு முறையான தார்சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகமும், காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




