கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கோடைகால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா பொருளாளர் ரஹ்மான் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தாங்கள் கற்றுக் கொண்ட பிரார்த்தனைகள் மற்றும் திருக்குர்ஆன் சூராக்களை பொதுமக்களின் முன்னிலையில் மிகுந்த தைரியத்துடன் ஓதி காட்டினார்கள் பட்டிமன்றம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இளைஞர்கள் வழி தவறுவதற்கு பெரிதும் காரணம் பெற்றோர்களா அல்லது சமூகமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது .இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர் நிகழ்ச்சியின் சிறப்புரை மாநில பேச்சாளர் சகோதரர் ரியாஸ் ஹமீத் கலந்து கொண்டு குழந்தைகள் ஓர் அமானிதம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்த விழாவின் ஏற்பாடுகளை நிர்வாகிகள் அகமது அலி மற்றும் ஜபருல்லா ஆகியோர் செய்திருந்தனர் மாணவ மாணவிகள் ஜமாத்தார்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்




