இராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்த முயன்ற, 2 கோடி ரூபாய் ம திப்புள்ள, கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற, 2 கோடி ரூபாய் ம திப்புள்ள, கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம், மணல்வாடி தெரு பகுதியில், கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் அகில்தம்பிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மரைன் போலீசார், வன பாதுகாப்புபடை ஊழியர்கள் ஆகியோர், அப்பகுதியில் சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும், மணல்வாடி தெருவில் உள்ள சர்ச் பின்புறம் மறைவான இடத்தில், கடல் அட்டை மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை போட்டு விட்டு, கடத்தல்காரர்கள் தப்பினர்.
போலீசார், 600 கிலோ கடல் அட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து, தப்பியோடியவர்களை தேடுகின்றனர். பறிமுதல் செய்யபட்ட கடல் அட்டையின் மதிப்பு, 2 கோடி ரூபாய்.
நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கப்பட்ட, பல கோடி ரூபாய் மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button