SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் முதுகுளத்தூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா !

SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் முதுகுளத்தூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா !

மாவட்ட துணைத்தலைவர் மௌலவி I. மீரான் முஹைதீன் மன்பஈ தேசியக் கொடியேற்றினார்!!

போற்றுதலுக்கும் , மரியாதைக்கும் உரிய நமது இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா , இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் முதுகுளத்தூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று காலை 8:30 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் மௌலவி I.மீரான் முஹைதீன் மன்பஈ அவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார் .
சிறப்பான இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் செய்யது சதக்கத்துல்லா , முதுகுளத்தூர் நகர் தலைவர் காதர் சுல்தான் , உட்பட திரளான நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.
தகவல் தொழில்நுட்ப அணி
SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்




