இராமநாதபுரம்
தமுமுக சார்பில் சுதந்திர தின கொடியேற்றம்

தமுமுக சார்பில் சுதந்திர தின கொடியேற்றம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மண்டபம் பேரூர் கிளை தமுமுக சார்பாக மண்டபத்தில் உள்ள அல் புகாரி இஸ்லாமிய கல்லூரியில் கொடியேற்றும் நிகழ்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ். சலீமுல்லாஹ் கான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில செயலாளர் அப்துல் காதர் மன்பஈ அவர்கள் சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார். தியாகிகளின் வீர வரலாறு மற்றும் தேச ஒற்றுமையின் அவசியம் குறித்து அவர் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மண்டபம் பேரூர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், மதரஸா மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டன.



