இராமநாதபுரம்
மகனை காப்பாற்ற சென்ற தாயும் தவறிவிழுந்த மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்

இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராம கோயில் குளத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மகனை காப்பாற்ற சென்ற தாயும் தவறிவிழுந்த மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் குயவன் குடி கிராம சுப்பையா கோவில் ஊரணியில் 14.12.2025 அன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் குளிக்க சென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஏழு குண்டல் என்பவர் மகன் நவீன வயது 12 குளத்தில் குளிக்க சென்று தவறி விழுந்து உள்ளார். மகனை காப்பாற்ற முயன்ற தாய் பென்சலம்மாள் வயது 30 இவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார். தாய்,மகன் ஆகியோர், உடலை இராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய போலீசார், கைப்பற்றி இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.




