திருச்சி அய்மான் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கு : துபாய் பொறியாளர் பங்கேற்பு

திருச்சி அய்மான் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கு : துபாய் பொறியாளர் பங்கேற்பு

திருச்சி :
திருச்சி அய்மான் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
இந்த கருத்தரங்கு கல்லூரியின் உணவு சேவை மேலாண்மை மற்றும் உணவியல் முதுகலைத் துறை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணைய சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
இதில் துபாய் பொறியாளர் விஷ்ணுபிரியா பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அவர் உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்.
கல்லூரி இயக்குநர் பஹ்மிதா தபசும், துணை முதல்வர்கள் எம். ஜாஸ்மின் உகானிதா, பைரோஸ், வணிகவியல் இளநிலை துறைத் தலைவர் தஸ்லிம் ஜீனத், பேராசிரியை லீனா உள்ளிட்டோர் கருத்தரங்கில் முன்னிலை வகித்தனர்.
மாணவிகள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.




