கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழாவிற்கு INS பருந்து, உச்சிப்புளி-யின் Station Air Electrical Officer-ஆக பணியாற்றும் Lieutenant Commander ஜோபின் ஜான் அவர்கள் தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.பள்ளியின் தாளாளர் சிராஜுதீன் அவர்கள் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஹமீது நிசா அவர்களின் வழிகாட்டுதலில் விழா ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன.விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் Chennai Crescent School மாணவர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு தேசபக்தி பாடல்களுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.






