இராமநாதபுரம்

கமுதியில்_எனது இந்தியா இயக்கம் சார்பில்- போதையில்லாத இந்தியாவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கமுதியில்_எனது இந்தியா இயக்கம் சார்பில்- போதையில்லாத இந்தியாவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் எனதுஇந்தியாஇயக்கம் – நஷா முக்தி யுவ அபியான் ,ஸ்ரீபகவதிஅறக்கட்டளை மற்றும் விஜயபாண்டியன் தற்காப்புகலை பயிற்சிமையம் ஆகியவை இணைந்து போதையில்லாத இந்தியா என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மானுவேல் பெர்லி தலைமை வகித்தார், விஜயபாண்டியன் தற்காப்பு கலை பயிற்சி மையத்தின் தலைவர் செல்வபாண்டி முன்னிலைவகித்தார், ஸ்ரீ பகவதி அறக்கட்டளையின் தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன் கலந்துகொண்டு போதையில்லாத இந்தியா என்ற தலைப்பில் போர்கால கலையான சிலம்பு பயிற்சி எடுக்கும் இளைஞர்கள், மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் மாபெரும் மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல அனைவரும் கையெழுத்து இட்டனர், பிறகு சிலம்பாட்டம் மூலம் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது இதில் தடைசெய்ய வேண்டிய கஞ்சா, மதுபானம், போதை பவுடர் ஆகிய போதை பொருள்களை தவிர்க்க வேண்டும் என கருத்துரைகள் பேசினார்கள் , கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிலம்பு ஆசிரியர் இராமர், லட்சுமணன், விக்னேஷ், தன்னார்வலர்கள் முனீஸ்குமார், முருகன்,இராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button