இராமநாதபுரம்
பாம்பன் பாலத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

பாம்பன் பாலத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், காரில் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பாம்பன் சாலைப்பாலம் மீது கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தம்பதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை பொதுமக்கள உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர்.


