இராமநாதபுரம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்முப்பெரும் விழா

இராமநாதபுரம் மாவட்டம்
நம்புதாழையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நம்புதாழை ஃபாரிஸ் மாநிலத் துணைச் செயலாளர் தலைமையில் ” முப்பெரும் விழா ” நடை பெற்றது இந்நிகழ்வில்
சமூக நல்லிணக்க பேரவை
மாநில துணைச் செயலாளர் பீ.முகமது இஸ்மாயில் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கோவிந்தராசு,மாவட்ட செய்தி தொடர்பாளர்
சத்யராசு வளவன்,திருவாடானை ஒன்றிய செயலாளர்
ராதாகிருஷ்ணன் மாவட்டத் துணைச் செயலாளர் நைனா அசாருதீன்
முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை
மாநில செயலாளர் அ.ர.அப்துல் ரகுமான் அவர்கள் கலந்துகொண்டு
சிறந்த சமூக சேவகர்களுக்கு விருதுகளை வழங்கி,சமத்துவ, சகோதரத்துவ பண்புகளின் சிறப்பு குறித்தும் ஜனநாயகத்தின் வலிமை குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.இந்த விழாவினில்
தொண்டி மற்றும் நம்புதாழை பகுதிகளில் சிறப்பான மக்கள் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஏராளமான தங்களை
விடுதலைச் சிறுத்தைகளாக இணைத்துக்கொண்டனர்.
தங்களை கட்சியில் இணைத்துக்கொண்ட இளைஞர்கள்
சனாதனத்திற்கு எதிராகவும், சர்வாதிகார அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஜனநாயக வழியில் எழுச்சித்தமிழர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி,
அவரது கொள்கை வழியில் களமாடுவோம் என்று
உறுதிமொழி ஏற்றனர்.

கீழக்கரை நகர்
சார்பில் அ.ஹிதாயத்துல்லா
சமூக நல்லிணக்க பேரவையின்
மாவட்ட துணை அமைப்பாளர்
அஜ்மல் கான் ஆலிம்,
சஃப்ராஸ் மீரான்,
சிறுத்தை மு.சபீர் அலி மற்றும்
ஜகுபர் சாதிக்
கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button