நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாயாகுளம் ஊராட்சியில் நூலகம் உள்ளது.இக்கட்டிடம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022–2023 நூலகக் கட்டிடம் ஆகும் இதன் மதிப்பீடு. ரூ 151700 கட்டப்பட்டுள்ளது. மாயாகுளம் ஊராட்சி சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்,இதன்மூலம் வாசகர்களும், மாணவ மாணவியர்களும் இந்நூலகத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் போட்டி தேர்வுக்கு தயாராகும் கிராமப்புற மாணவர்கள், புத்தகங்களை வாசிக்கும் இளைஞர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நூலகம் அருகில் கழிப்பறை வசதியும் சில மாதங்களுக்கு முன்னால் புதுப்பிக்கப்பட்டது.
ஆனால் நூலகம் இந்நாள் வரை காட்சி பொருளாகவே காணப்படுகிறது,
இங்கிருந்து வெளியிடங்களில் உள்ள நூலகத்தை நாடும் சூழல் உருவாகி வருகிறது, இந்நூலகத்தை
தூய்மைப்படுத்தி அப்பகுதி வாசகர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




