முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பில் இந்திய சுதந்திர தின விழா
நமது நாட்டின் 80 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பில், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க கட்டிடத்தின் அருகில் தேசியகொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது,
இந்த நிகழ்வில் முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல், ஜமாத் தலைவர் காதர் முகைதீன், துணை தலைவர் காதர் நைனார் கனி,மழலையர் பள்ளி தாளாளர் பாசில் அமீன், தொடக்கப் பள்ளி தாளாளர் காஜா கமருதீன், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜஹாங்கீர், மற்றும் முன்னாள் ஜமாத் தலைவர் MMKM காதர் முகைதீன், கல்விக்குழு ஆடிட்டர் முகமது இக்பால், மற்றும் ஜமாத்தார்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கமால் பாட்ஷா, தமிமுல் அன்சாரி, ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க துணை செயலாளர் முஷாரப் மற்றும் பொருளாளர் சீனி முஹம்மது, சங்க உறுப்பினர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள், பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், ஆகியோர் ஒருங்கிணைக்க, ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க செயலாளர் அகமது கபீர்அவர்கள் வரவேற்பு உரையாற்ற, முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காதர் மொகைதீன் சிறப்புரை ஆற்றினார், நமது நாட்டின் தேசிய கொடியை ஜமாத் தலைவர் காதர் முகைதீன் சிறப்பாக ஏற்றி வைக்க, விழா இனிதே நிறைவுற்றது.
ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை ஹிம்மத்துல் வாலிபர் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.




