இராமநாதபுரம்

கீழக்கரையில் பட்டா சிறப்பு முகாம்

கீழக்கரையில் பட்டா சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பட்டா, உழவர் அட்டை மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து வட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

இதன்படி கீழக்கரை, கடலாடி வட்டங்களில் ஜூலை 14, 15ம் தேதிகளில் பட்டா மாறுதல், பட்டா மேல் முறையீடு, கணினி திருத்தம், உழவர் அட்டை மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் தொடர்பாக சிறப்பு முகாம் தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளன. இதே போன்று பரமக்குடி, இராமேஸ்வரம் தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம் ஜூலை 16, 17 ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

பொதுமக்கள் பங்கேற்று தங்களது பட்டா, உழவர் அட்டை மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் தொடர்பான கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் மனு செய்து உடனடியாக பயன் பெறலாம் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button