இராமநாதபுரம்

அபிராமம் அருகே கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம், பாதை அமைத்துக் கொடுக்க மக்கள் கோரிக்கை

அபிராமம் அருகே கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம், பாதை அமைத்துக் கொடுக்க மக்கள் கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள செய்யாமங்கலம் கிராமம், முனியேனந்தலில் கால்வாய் அகலப்படுத்தும் பணி என்ற பெயரில் பொது மக்கள் வசிக்கும் வீடுகளை ஒட்டி பல அடியில் ஆழமாக பள்ளம் தோண்டியுள்ளனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக கால்வாயின் அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சிமெண்ட் குழாய் தூம்புகளை கொண்டு சிறு பாலம் அமைத்து இதனை நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று முடிந்து விட்டது. இருந்த போதும் குடியிருப்பு வாசிகளுக்கு பாதை அமைத்துக் கொடுக்கவில்லை. கால்வாயின் அருகில் தான் பேருந்துகள் செல்லும் சாலை அமைந்துள்ளது. இதனால் நடந்து செல்ல நடைபாதை வசதி இல்லாமல் பொது மக்கள் நீண்ட தூரம் சுற்றிச்செல்லும் அவலநிலை உள்ளது. வீடுகளை ஒட்டியுள்ள இந்த ஆழமான பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விசாரனை மேற்கொண்டு பாதை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து விரைவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button