இராமநாதபுரம்
கீழக்கரை : உயர் மின் கோபுர விளக்கு திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட நான்கு இடங்களில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்கினை இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களுடன் இணைந்து மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக கீழக்கரை நகரச் செயலாளர் பஷீர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி மாநில துணைத்தலைவர் நெய்னா முஹம்மது, மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் துணை தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




