இராமநாதபுரம்முதுகுளத்தூர்

தமுமுக மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமையில் முதல்வரிடம் மனு அளித்தனர்

தமுமுக மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமையில் முதல்வரிடம் மனு அளித்தனர்

இராமநாதபுரம் வருகை தந்த தமிழக முதல்வர் திரு.முக.ஸ்டாலின் அவர்களிடம் தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் தலைமையில் மூன்று மக்கள் கோரிக்கை காண மனு வழங்கப்பட்டது.

1)பரமக்குடி டாஸ்மாக் கடை எண்:6933 மதுபானக் கடையையும், பார் ஐ யும் மாற்றக்கோரியும்.

2)இராமநாதபுரம் வெளிப்பட்டினம் பாம்பூராணி முழுவதும் மக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைத்து நடை பயிற்சி மையம் அமைக்க வேண்டும். அங்கு சுற்றி வீடு அமைத்து வாழும் ஏழை மக்களுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் முதலமைச்சர் அவர்கள் வீட்டுமனை அல்லது வீடு வழங்க வேண்டும்.

3)இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சி மக்களுக்கும் இலங்கை அகதி மக்களுக்கும் ஒரே மாதிரியான போஸ்ட் பின்கோடு
623519 நம்பர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மக்களின் அடிப்படை தேவையான பாஸ்போர்ட் எடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. அகதிகளுக்கும் அங்கு வாழும் இந்திய மக்களுக்கும் ஒரே மாதிரியான பின்கோடு வழங்கப்பட்டுள்ளதால் இரண்டிற்கும் தனித்தனி பின்கோடு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இன்று 03-.10.2025 மனு கொடுக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button