இராமநாதபுரம்

மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு

பேரன்புமிக்க அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,

அண்ணலம் பெருமானார் (ஸல்.,) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளின் படி இந்த சமுதாயத்தில் மஹல்லா ஜமாஅத்கள் கட்டுக்கோப்புடனும், தன்னிறைவோடும் இருக்க வேண்டும், சன்மார்க்க கடமைகளை கற்றறிந்த சங்கைக்குரிய உலமாக்களின் அறிவுரைகளை ஏற்று நடக்க வேண்டும் என நாளும் முழங்கி வரும் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில்,
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28.01.2026 புதன்கிழமை மாலை 4 மணி அளவில் கும்பகோணம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாராசுரம் பைபாஸ் அருகில் உள்ள திடலில் ‘மஹல்லா ஜமாஅத் மாண்பை போற்றுவோம்’, ‘சிறுபான்மையினர் உரிமை மீட்போம்’ என்ற முழக்கத்தோடு, நடைபெறும் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டில் நீங்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருள் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு மு க ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் இருந்தும் கண்ணியமிக்க உலமா பெருமக்கள், ஜமாஅத் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய, மாநில, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் என பல தரப்பட்ட தலைவர்களும், அறிஞர்களும், சான்றோர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.

இந்த சிறப்புமிகு மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டில் தங்களுடைய மஹல்லாவைச் சார்ந்த கண்ணியமிக்க நிர்வாகிகள் ஜமாத்தார்கள் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
கே நவாஸ்கனி MP
தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம்,
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
தேசிய செயலாளர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button