கீழக்கரை : த.வெ.க.வில் இணைந்த இளைஞர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், கழக பொதுச் செயலாளர் அண்ணன் N. ஆனந்த் MLA, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படியும், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கழகச் செயலாளர் மலர்விழி ஜெயபாலா வழிகாட்டுதலின்படியும் கீழக்கரை நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான் அவர்கள் தலைமையில் கீழக்கரையில் 07 வது வார்டு செயலாளராக அர்ஷாத் அலி மற்றும் வார்டு நிர்வாகிகளாக இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர் இதில் நகர நிர்வாகி முபிஃத், துணைச் செயலாளர், ஆயிஷா, 07 வது வார்டு செயலாளர் அர்ஷாத் அலி மற்றும் நிர்வாகிகள் இளைஞர் அணி அமைப்பாளர் முஜிபு ரஹ்மான் ,மாணவர் அணி அமைப்பாளர் ஆசீஃப், கொள்கைப்பரப்பு அணி அமைப்பாளர் கிஷோர் மற்றும் தகவல் தொழில்நுட்ப குழு அமைப்பாளர் தினேஷ் குமார் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 07 வது வார்டில் கழிவுநீர் வடிகால் நீண்ட நாள் பிரச்சனையாக உள்ளதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு நடக்க அதிக வாய்ப்புள்ளது என்று அதனை சரி செய்து தருமாறு கழகச் செயலாளர் இடம் மனு அளிக்கப்பட்டது அதனை ஏற்று மேலும் நகரின் வளர்ச்சிக்காக செயல்படுவேன் என்று நகர் செயலாளர் உறுதியளித்தார்.





