இராமநாதபுரம்

கமுதி அருகே சந்தனக்கூடு விழா

கமுதி அருகே சந்தனக்கூடு விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் உள்ள மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த விழாவில், பள்ளிவாசலில் இருந்து சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டு, அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு கிராம வீதிகளில் வலம் வந்து தர்ஹாவை வந்தடைந்தது. இந்த விழாவில் இஸ்லாமிய இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரியமான களிகம்பு நடனமாடி அனவைரையும் கவர்ந்தனர்.
விழாவுக்காக பள்ளிவாசல் மற்றும் தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button