இராமநாதபுரம்

ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்தும் குடிநீர், பாதாள சாக்கடை, கழிவு நீர் என மக்களின் அடிப்படை குறைகளை தீர்ப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் இராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் அதிகாரிகள் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் உட்பட அனைத்து அலுவலர்களையும் வலியுறுத்தி பேசினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button