சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம்

சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம் 09/07/26 வியாழக்கிழமை இரவு வடக்கு தெரு தாருஸ்ஸலாம் மர்கஸில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கீழ்கண்ட பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
கீழக்கரை மின்சார வாரிய அலுவலகத்தில் நிலவும் மின் கட்டண குளறுபடிகளை அரசு துறைக்கு கொண்டு செல்வது என்றும்,
கீழக்கரையில் மத்திய அரசு நிதியில் நடைபெறும் ஜல் ஜீவன் குடிநீர் திட்டம் கிடப்பில் போடபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்றும்,
ஜல் ஜீவன் திட்டத்தில் தோண்டப்பட்ட சாலைகளையும் மற்றும் கீழக்கரையில் சிதிலமடைந்து இருக்கும் குறிப்பாக வணக்கஸ்தளங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் சிதிலமடைந்து இருக்கும் சாலைகளை கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்றும்,
தனியார் கல்லூரி திருப்பத்தில் மாவட்ட நெடுஞ்சாலை துறையினர் கூட்டமைப்பு சார்பாக கடந்த மாதம் 23 ம்தேதி நடத்த இருந்த அல்வா கொடுக்கும் போராட்டத்தை நடத்த விடாமல் இருக்க எந்த விதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் அவசர அவசரமாக அமைத்த வேகத்தடை சம்பந்தமாகவும், கீழக்கரை நகர் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்றும் ஆலோசனை செய்யப்பட்டது.
பொதுமக்கள் நலன் கருதி எதிர் வரும் 23 ம்தேதி கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் கூட்டமைப்பு சார்பாக நடத்த இருக்கும் காத்திருப்பு போராட்டத்தை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.




