பரமக்குடி பள்ளி மாணவிகள் மாநில போட்டிக்கு தேர்வு

பரமக்குடி பள்ளி மாணவிகள் மாநில போட்டிக்கு தேர்வு
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான நடைபெற்ற தனித்திறன் விளையாட்டுப் போட்டியில் பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கு பெற்றனர்.இதில் 14 வயது பிரிவில் யாழினி குண்டு எறிதலில் முதலிடமும்,தட்டு எறிதலில் முதலிடமும் அதே பிரிவில் ஹர்சிதா, உயரம் தாண்டுதலில் இரண்டாமிடமும் அடுத்து 19 வயது பிரிவில் மினு சஞ்சனா குண்டு எறிதலில் முதலிடமும் தட்டு எறிதலில் இரண்டாமிடமும் ஈட்டி எறிதலில் முதலிடமும் அடுத்து அதே பிரிவில் கனிமொழி 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடமும் 3000 மீட்டர் ஓட்ட போட்டியில் இரண்டாமிடமும் பெற்றுள்ள இவர்கள் அனைவரும் மாநில போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.வெற்றி பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியைகள் குழந்தை தெரசா, பாரதி ஞானராணி,எலிசபெத் ராணி ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் சரோஜா வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.





