இராமநாதபுரம்
தேர்வுப்பணி

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பார்வையாளர்கள் (பொது) டாக்டர் மணிஷ் ரஞ்சன் (திருவாடானை), ஓம் பிரகாஷ் (இராமநாதபுரம்) , ரெஹனா பதூல் (பரமக்குடி -தனி) மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஆகியோர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 -இல் பயன்படுத்தப்பட உள்ள வாக்கு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு அச்சு இயந்திரங்களின் (VVPATs) First Randomization) முதல்நிலை தேர்வுப்பணிகள் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உள்ளனர்.





