இராமநாதபுரம்

திமுக : உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை முகாம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டபம், உச்சிப்புளி, இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர் காதர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அப்போது வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் இராமநாதபுரம்
தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்கள் குறித்து பொது மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இது வெறும் உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்ல தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியாக ஒன்றிணைக்கும் மாபெரும் புரட்சி என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஒன்றியம், நகர் கழக செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள்கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button