பெண் அடித்து கொலை மகள், மருமகன் கைது
பெண் அடித்து கொலை மகள், மருமகன் கைது
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரையூர் பீட்டர்புரத்தில், குடும்பத் தகராறில் மாமியார் வாசுகி வயது 48, என்பவரை அவரது மருமகன் உதயகுமார் வயது 22, கோடாரியால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உதயகுமார், வாசுகியின் மகள் ஹேமலதாவை வயது 19, நான்கு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். குடும்பப் பிரச்னை காரணமாக இருவரும்சிலநாட்களாக ஹேமலதாவின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. உதயகுமார் மது அருந்திவி ட் டு மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதை வாசுகி கண்டித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசுகி தனது நிலத்தை விற்று வைத்திருந்த பணத்தை கேட்டு பிரச்சனை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந் த உதயகுமார், வாசுகியின் தலையில் கோடாரியால் வெட்டியதாகவும், இதில் அவர் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் உதயகுமாரும் ஹேமலதாவும் தூங்கச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மறுநாள் காலை வாசுகி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, அவர் இயற்கை அடைந்தது மரணம் போல் காட்டுவதற்காக இருவரும் முயன்றதாக கூறப்படுகிறது.
வாசுகியின் மூத்த மகள் ஹேமா வந்து பார்த்தபோது சந்தேகம் பேரையூர் ஏற்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸ் விசாரணையில் கொலை நடந்தது தெரியவந் த தை தொடர்ந்து உதயகுமார் மற்றும் கொலையை மறைக்க முயன்றதாக கூறப்படும் வாசுகியின் மகள் ஹேமலதா ஆகிய இருவரையும் இன்ஸ்பெக்டர் ஜெக தீ சன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.




