இராமநாதபுரம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்.உற்சாகமாக விளையாடிய மாணவர்கள்

இராமநாதபுரம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்.உற்சாகமாக விளையாடிய மாணவர்கள்

ராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வள்ளல் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஒற்றை, இரட்டை சிலம்பம் போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
14,17,19 வயதிற்கான நடத்தப்பட்ட இப் போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தொடங்கி வைத்தார். இன்றைய போட்டியில் 14 வயது சிறுவன் தன்னைவிட உயரம் அதிகமான சிலம்ப கம்பினை தொடர்ந்து சுற்றியது பார்வையாளர்களை வியக்க வைத்தது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறுவர்கள் மாநில போட்டிகளில் விளையாட தகுதி பெறுவார்கள் என தெரிவித்தனர். போட்டி ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் தலைமையில் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.




