இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் விற்பனை செய்வதற்கான POS எந்திரத்தில் ஏற்பட்டுள்ள சர்வர் பிரச்சினையை உடனடியாக சரிசெய்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டத் தலைவர் ஜோதி முருகன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் அமர்நாதன், வட்டப் பொருளாளர் ஞானபெத்த பெருமாள், மாவட்டச் செயலாளர் காட்டு ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

POS எந்திரம் மற்றும் சர்வர் கோளாறால் பணியாளர்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் சந்திக்கும் சிரமங்களை உடனடியாக போக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button