தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகமாக பள்ளிவாசல்கள் நிறைந்த முதன்மையான ஊர்களில் அதிராம்பட்டினமும் ஒன்று 46 பள்ளிவாசல்கள்

தமிழகத்தில் அதிகமாக பள்ளிவாசல்கள் நிறைந்த முதன்மையான ஊர்களில் அதிராம்பட்டினமும் ஒன்று 46 பள்ளிவாசல்கள்

அதிராம்பட்டினத்தில் சுமார் 46 பள்ளிவாசல் இருந்தாலும் 42 பள்ளிவாசல்கள் இங்கே பதிவிட்டு இருக்கின்றோம். மேலும் விடுபட்டவைகளை அரிய தந்தால் சேர்த்துக்கொள்ளாம்.

வணிகர்கள் வருகை:
கி.பி 1120-ல் எகிப்து மற்றும் ஏமன் நாட்டில் இருந்து அரபு வணிகர்கள் பாண்டிய மன்னர்களின் கொற்கை துறைமுகத்தில் (இன்றைய காயல்பட்டினம்) வந்து இறங்கினார்கள். அவர்களில் சிலர் அதிராம்பட்டினத்தில் குடிபெயர்ந்தனர். இவர்கள் இலங்கை யாழ்ப்பாணத்துடன் வலுவான வர்த்தக தொடர்பு வைத்திருந்தனர்.

முதல் பள்ளிவாசல்:
கி.பி 1180-ல் காயல்பட்டினத்தில் இருந்து வந்த பணக்காரர் ( தகலான் மரைக்காயர் (Dhahla Maraicayar) தான் முதலில் செல்லிநகர் என்று அழைக்கப்பட்ட அதிராம்பட்டினத்தில் குடியேறியவர். அவர் கட்டிய மிக பழமையான பள்ளிவாசல், அவர் பெயரால் மரைக்காப்பள்ளி என்று அழைக்கப்பட்டு, இன்று அல் மஸ்ஜிதுல் அக்ஸா என்று அழைக்கப்படுகிறது.

பெரிய ஜும்மா பள்ளிவாசல் ( குத்பா பள்ளி) 1638 இல் மஹ்தும் சின்னலெப்பை ஆலிம் அவர்களால் கட்டப்பட்ட து.

கடற்கரை தெருவிலும் பழமையான பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது.

வரலாறு இன்னும் பின்னோக்கியது என்றும் கி.பி. 700-800 களில் அரபு ஆய்வாளர்கள் வந்துள்ளனர் அவர்களுடைய காலத்தில் கீற்றுக் கொட்டகையில் பள்ளிவாசல்கள் செயல்பட்டதாகவும். பிறகு 1180 இல் மறைக்காப்பள்ளி கட்டிடங்களாக கட்டப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கலாச்சாரம்: அதிரையின் கலாச்சாரம் இஸ்லாமிய சிந்தனையால் வலுவாக கட்டமைக்கப்பட்டது.

அதிரையில் வாழ்க்கை பாங்கு ஒலியை (Adhan) சுற்றியே இயங்குகிறது. காயல்பட்டினம், அதிராம்பட்டினம், கீழக்கரை ஆகிய மூன்று ஊர்களுக்கும்
இடையே வலுவான கலாச்சார தொடர்பு இருந்துள்ளது.

இந்து- முஸ்லிம் வரலாற்று மரபு.

அதிரையின் வரலாறு ஒரே சமூகத்தின் வரலாறு மற்றும் அல்ல பழைய குறிப்புகளில் பள்ளிவாசல்களுடன், சிவன் கோவில், மாரியம்மன் கோயில், செல்லியம்மன் கோயில், பெருமாள் கோயில் போன்ற கோயில்களும் குறிப்பிடப்படுகின்றன.

தொகுப்பு S. அதிரை அப்துல் காதர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button