தமிழ்நாடு

“பு.ரா.புருஷோத்தம நாயடுவின் தமிழியல் பங்களிப்புகள்” என்னும் கருத்தரங்கம்

புதுதில்லி சாகித்திய அகாதெமியும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நடத்திய “பு.ரா.புருஷோத்தம நாயடுவின் தமிழியல் பங்களிப்புகள்” என்னும் கருத்தரங்கம் 20.08.2026 அன்று காலை 9 மணிக்கு மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கம் பு.ரா.புருஷோத்தம நாயடு அவர்களின் 125ஆம் பிறந்த ஆண்டினையொட்டி கொண்டாடப்பட்டது. இக்கருத்தரங்கத்தின் வரவேற்புரையினைச் சாகித்திய அகாதமியின் செயலர் டாக்டர் வருண் குலோட்டி அவர்கள் வழங்கினார். கருத்தரங்கத்தின் தலைமையுரையினைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா ஆற்றினார். கல்லூரியின் தலைவர் திரு.மூ.விஜயராகவன், கௌரவத்தலைவர் பொறியாளர் சு.இராஜகோபால், செயலர் பொறியாளர் சு.இரா.ஸ்ரீதர், பொருளாளர் திரு.அ.ஆழ்வார்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்கத்தின் நோக்கவுரையினைச் சாகித்திய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இரா.தாமோதரன் அவர்கள் எடுத்துரைத்தார். கருத்தரங்கத்தில் வாசிக்கப்படவுள்ள கட்டுரைகள் நூலாகத் தொகுத்து வெளியிடப்பட்டது மிகச் சிறப்பாகும்.
கருத்தரங்கத்தின் தொடக்கவுரையினைப் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் ஆற்றினார். இவர் புருஷோத்தமனாரின் பன்னூல் புலமைத்திறத்தினைச் சான்றுகளுடன் எடுத்துரைத்தார். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.திருஞானசம்பந்தம் நன்றியுரை கூறினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் முனைவர் மு.கற்பகம் அவர்கள் புருஷோத்தமனாரின் இலக்கணப் புலமையையும், முனைவர் சு.வினோத் புருஷோத்தமனாரின் கம்பராமாயண வாசிப்புத் திறத்தினையும், முனைவர் இரா.இலக்குவன் புருஷோத்தமனாரின் வைணவப் புலமையினையும் விளக்குகின்ற கட்டுரைகளை முறையே வாசித்தளித்தனர்.
இரண்டாம் அமர்வில் முனைவர் பி. ஸ்ரீ தேவி புருஷோத்தமனாரின் கட்டுரைக்கதம்பம் நூற்சிறப்பினையும் முனைவர் வி.அருள் புருஷோத்தமனாரின் செவ்விலக்கிய மேற்கோள்களையும், முனைவர் அ.மோகனா புருஷோத்தமனாரின் பதிப்புச் செயற்பாடுகளையும் விரிவாகஎடுத்துரைத்தனர். விழாவின் நிறைவாக நடைபெற்ற நிறைவுரை அமர்விற்குத் தமிழ் உயராய்வு மையத்தின் தலைவர் முனைவர் சீ.காயத்ரிதேவி தலைமை தாங்கினார். காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பா.ஆனந்தகுமார் விழா நிறைவுப் பேருரையாற்றினார். புருஷோத்தமனாரின் பல்சமய நோக்குத் திறனைக் குறித்து தெளிவாக அழகாக மாணவர்கள் மனங்கொள்ளுமாறு எடுத்துரைத்தார்.
நிறைவு விழாவின் நன்றியுரையைத் தமிழ் உயராய்வு மைய பேராசிரியர் முனைவர் கோ.தேவிபூமா கூறினார். கருத்தரங்கத்தில் பேராசிரியர் வின்சென்ட், சாந்தகுமாரசுவாமிகள், முனைவர்தி.மல்லிகா, முனைவர் சே.முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வி.மோனிகா யாழினி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திருமதி க.இராஜலட்சுமி, கார்த்திக் ராஜா, தேவராஜபாண்டியன் மற்றும் பிற கல்லூரிகளில் பயிலும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுகலை மாணவர்கள் பேராசிரியர்கள் என 500 பேர் நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர். நாட்டுப்பண்ணோடு விழா இனிதே நிறைவுற்றது. நிகழ்வில் பு.ரா. புருஷோத்தமனாரின் நூல்களை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button