உலகம்

சிங்கப்பூரில் தமிழ் கற்றல் தளம் www.sorkkal.com உதயம்!

சிங்கப்பூரில் தமிழ் கற்றல் தளம் www.sorkkal.com உதயம்!

உலகெங்கிலும் வாழும் மாணவர்கள் தமிழ்மொழியை இலகுவாகவும் இலவசமாகவும் கற்றுக்கொள்ள இணையத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது, சிங்கப்பூர் கணினி நிறுவனமான Infocom Consultants.

இதன் நிறுவனர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் செயலாளரும், கணிதப் பேராசிரியருமான P M A அமானுல்லாஹ், இந்த இணையத்தளத்தை வடிவமைத்துள்ளார்.

மாணவர்கள் தமிழ் மொழியை எளிமையாக பயிலவும், பயிற்சி செய்யவும் 40க்கும் மேற்பட்ட கணினி பயிற்சி தமிழ் விளையாட்டுகளைக் கொண்டு மாணவர்களை கவரும் வண்ணம், நுண்ணறிவின் ஆற்றலைப் பயன்படுத்தி இந்த இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தை பயன்படுத்துவதற்கு முன்பதிவோ, மாதாந்திர கட்டணமோ செலுத்த தேவையில்லை.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் தமிழ் ஆர்வத்தை வளர்க்க இந்தத் தளம் மிகவும் உதவியாக இருக்கும்.

பள்ளி ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுக்கு தமிழ் பயிற்சி அளிக்க இந்த தளம் மிகவும் ஏற்றது.

கை தொலைபேசி மற்றும் டேப்லெட் கருவிகளிலும் அனைவரும் இந்த தளத்தைப் பயன்படுத்தலாம்.

“சொற்கள்” என்றழைக்கப்படும் இந்த இணையத்தளம் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பயனாளர்களை தன் வசம் ஈர்த்துள்ளது. மேல் விபரங்களை www.sorkkal.com எனும் இணைய முகவரியில் காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button