மலேசியா செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணனின் கவிச்சோலை என்னும் நூல் அறிமுக விழா

மலேசியா செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணனின் கவிச்சோலை என்னும் நூல் அறிமுக விழா -30.12.2025

கவிச்சோலை மரபு கவிதை நூலில் கருத்துக்குவியல்கள் அதிகமாக குவிந்துகிடக்கின்றன-வில்கையாவால்
செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணணின் கவிச்சோலை எனும் மரபு கவிதை நூலில்
கருத்துக்குவியல்கள் அதிகமாக குவிந்துகிடக்கின்றன என இங்குள்ள திருப்பதி மண்டபத்தில் தலைமையுரையாற்றிய தொல்காப்பிய செம்மல் தமிழியல் ஆய்வாளரான இல திருச்செல்வம் மேற்கண்டவாறு கூறினார்
அவர் மேலும் கூறுகையில் களிச்சொலை மரபுக் கவிதையில் அவர் இந்த வயதிலும் நேரிடையாகவே இந்த தமிழ் சமுதாயத்தில் மலிந்து கிடக்கின்ற அவல நிலையை சுட்டிக்காட்டியுள்ளார் தனது ஆய்வுரையில் சுட்டிக்காட்டிப் பேசினார்.குறிப்பாக இக்கவிதை நூலில் உழைத்திட நிலமிருக்க இங்கே உண்ணுதற்கு வழியிருக்க தழைத்திட மறந்ததேனோ தமிழா தன்மானம் குறைந்ததேனோ எனும் கவிதையில் நாம் உழைப்பதை மறந்து வேலை செய்யாமலே பல குறுக்கு வழியில் பணம் திரட்ட முயல்கிறோமென கவிஞர் நேரிடையாக தமிழ் சமுதாயத்தை கேள்வி கேட்பதாகஅவர் கூறினார். இந்நிகழ்சியில் ஏற்புரை வழங்கிய செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணன் அவர்கள் தமதுரையில் தாம் 1960 ஆம் ஆண்டிலேயே கவிதை எழுத தொடங்கியதாகவும் எனது வாழ்வில் அறுபது ஆண்டுகளில் சமுதாயப் பணியும் கவிதையும் ஒரு சேர தொடங்கியதாக அவர் கூறினார்.
இந்நிகழ்சியில் சிறப்புரையாற்றிய கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர் முனைவர் க.உதயகுமார் தமது சிறப்புரையில் அண்மையில் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் மரபுக் கவிதையும், புதுக்கவிதை கருத்தரங்கமும் ஒரு சேர ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார் அவர் தொடர்ந்து தமதுரையில் மரபுக் கவிதை கருத்தரங்கிற்கு வராத மரபுக்கவிஞர்கள் மறுநாள் பரிசுப்பெறுவதற்காக வந்தனர் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் திருப்பதி சுப்பிரமணியம் சிறப்புரையாற்றுகையில் இந்த மரபுக் கவிதை நூல் வெளியீட்டு விழா முன்பு கங்கைபட்டாணியில் நடந்துவிட்டதாமே ஒருவர்என்னிடம் முறையிட்டார் என அவர்கூறினார்
அதற்கு பதிலளித்த நான் ஒரு மரபு கவிதைநூல் எத்தனை முறை வெளியீடு கண்டால் என்ன?ஒரு நல்ல கவிதை நூல் எத்தனை முறை வேண்டுமானாலும் வெளியீடு காணலாம் என அவருக்கு பதிலளித்தேன்
இந்த நூல் அறிமுக விழாவிற்கு யார் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?அவர்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு இம்மாதிரியான் நூல் அறிமுக விழா நடத்தலாம் என அவர் கூறினார்
இந்நிகழ்சியின் நெறியாளராக கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் செயலாளர் திருமதி காந்தி முருகன் பணியாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பினாங்கு மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் குமரனார் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் உட்கணக்காய்வாளர் செகு எம்.எ.ராமசாமி உட்பட அதிகமானோர் கலந்துகொண்டனர்.
செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணன்
கொழுந்துரை முத்தமிழ் பெரும் புலவர் இராமதாசரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






