துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகக்குழு கூட்டம்

துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகக்குழு கூட்டம்

துபாய் :
துபாயில் கடந்த 27-06-2026 சனிக்கிழமை மாலை அமீரக காயிதே மில்லத் பேரவையின் நிர்வாக குழு மற்றும் தாயகத்தில் இருந்து வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவர் எம் அப்துல் ரகுமான் , மாநில செயலாளர் மில்லத் முஹம்மது இஸ்மாயில், ஆகியோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பேரவையின் துணைத் தலைவர் முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ. முஹம்மது மஃஹ்ரூஃப் காகா தலைமையில் நடைபெற்றது.
விழாக்குழு செயலாளர் வேதாளை முஹைதீன் அப்துல் காதர் ஆலிம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
பேரவையின் துபாய் மண்டல செயலாளர் முஹம்மது காமில் வரவேற்புரை ஆற்றினார்.
பேரவையின் பொதுச் செயலாளர் ராமநாதபுரம் பரக்கத் அலி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து கருத்துரை ஆற்றினார். துணைப் பொதுச் செயலாளர் மக்கி பைசல் , சார்ஜா மண்டல செயலாளர், வடக்கு அமீரகங்களின் பொறுப்பாளர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், முஹைதீன் ஆலிம் ஆகியோர் இன்றைய கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை விளக்கி பேசினர்.
நாகூர் ஹாஜா ரயிசுதின் அமீரக காயிதே மில்லத் பேரவையில் தன்னை இணைத்துக் கொண்டு உறுப்பினர் சேர்க்கைக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்.
மாநில செயலாளர் அய்யம்பேட்டை மில்லத் முகம்மது இஸ்மாயில் தன்னுடைய ஏற்புரையில் மாணவர் பேரவையின் முக்கியத்துவம், அதில் பயணித்து வந்த அனுபவங்கள், சமீபத்திய தேர்தல் பணி மற்றும் கட்சியின் நிலைப்பாடுகள் கருத்து வேறுபாடுகளை விளக்கி பேசினார்.
மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் Ex.MP முஸ்லிம் லீக் கோட்பாடுகளை எளிய நடையில் விளக்கி நிறைவுறையாற்றினார்.
பேரவை நிர்வாகிகள் மூத்த பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், துபாய் மண்டல துணைச் செயலாளர் லால்பேட்டை கிஃபாயத்துல்லா , சமூக நல செயலாளர் அய்யம்பேட்டை இபுராகிம் தர்வேஷ் , கீழக்கரை ராஷிக், தேரா தமிழ் பஜார் பகுதி செயலாளர் பனைக்குளம் இப்ராஹிம், துணைச் செயலாளர் லால்பேட்டை நூருல் அமீன், அல் முத்தினா ஹோர்அல் ஹன்ஸ் பகுதி செயலாளர் வண்ணாங் குண்டு தைபுல்லா, அபுதாபி ஹம்தான் கரீம், சவுதியில் இருந்து வருகை தந்திருந்த அய்யம்பேட்டை அமானுல்லா., துபை மண்டல நிர்வாகிகள் அய்யம்பேட்டை முகமது நதீர், மன்சூர் ஹமீத் , முகமது இப்ராஹிம், சோசியல் மீடியா பசுலுல் இலாஹி , அய்யம்பேட்டை சொஹைல் இஸ்மாயில் , கீழக்கரை ரிஃபாத், ஹாஜிரா டிரேடிங் அய்யம்பேட்டை மஹாதீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.





