கொடுப்பதால் உயரும் குணம்.

கொடுப்பதால் உயரும் குணம்.

நல்ல புத்தகங்களைப் படித்தால்.
நிச்சயம் நல்ல “
பக்க “விளைவுகள் உண்டு.
‘இறைக்கும் கிணறுதான் ஊறும்’ என்றொரு பொன்மொழி நம் பகுதியில் சொல்லப்படுவது உண்டு. செல்வத்தில் கொழிப்பவர்கள் தங்களால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும். அவர்கள் பணத்தை இல்லாதவர்களுக்குத் தானமாக கொடுப்பதனால் அவருடைய செல்வம் ஒரு போதும் குறையாது. மேன்மேலும் ஊற்றெடுத்துக் கொண்டே செல்லும் என்பதைத் தான் அந்தப் பொன்மொழி உணர்த்துகிறது.
‘எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம்’ என்று சொல்வார்கள்.
நாம் கொடைத் தன்மை கொண்டாவர்களாக விளங்கினால் அந்தக் கொடை ஏதாவதொரு வகையில் நமக்குத் திரும்பக் கிடைக்கிறது.
“எந்த அளவுக்கு ஒருவன் தர முயல்கிறானோ அந்த அளவிற்கு
அவன் பெற முயல்கிறான்”
என்பதே உண்மையான பொருளாகும்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் கொடைத்தன்மை இன்றளவும் போற்றப் பட்டுவருகிறது. தங்கள் வரவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் கொடுப்பவர்களையும் வள்ளல், கொடையாளி என்று நாம் போற்றுகிறோம். ஆனால் தான் உழைத்து ஈட்டிய பணத்திற்கும் மேலாக அள்ளி அள்ளிக் கொடுத்தவர் கலைவாணர்.
தம் கையிருப்புகள் எல்லாம் கரைந்து வறுமையால் வாடி, நோயினால் பீடிக்கப்பட்டு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் கூட அவர் தமது கொடைத் திறத்தில் இருந்து விலகாமல் அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளார். அப்படி நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன.
ஒருநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்.எஸ். கிருஷ்ணனைப் பார்க்க அவருடன் நாடக மேடைகளில் நடித்த பழம்பெரும் நடிகர் ஒருவர் வந்திருந்தார்.
மிகுந்த வறுமையுடன், கலைவாணரைப் பார்த்தால் நம் கஷ்டம் தீராதா? என்ற எண்ணத்துடனேயே வந்திருந்தார் அந்த நாடகநடிகர். ஆனால் என்.எஸ்.கே. மருத்துவ மனையில் மிகுந்த சிரமத்துடன் வாழ்க் கையை ஓட்டி வருகிறார் என்பதை நேரில் பார்த்ததும் புரிந்து கொண்டார். அதனால் நலம் விசாரித்து விட்டு வாய்மூடி நின்றார்.
நண்பரின் வாடிய தோற்றத்தையும், வறுமை யையும், அவர் என்ன எதிர்பார்ப்புடன் இங்கு வந்திருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட கலைவாணர், தனது அருகில் இருந்த பால் வாங்கும் வெள்ளிக் கூஜாவை எடுத்து அவரிடம் நீட்டி,
“கொண்டு செல்லுங்கள் ” என்று கொடுத்தார்.
அந்த நண்பரோ தயங்க,
கலைவாணர் சிரித்துக் கொண்டே.
”இதை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வேறு யாராவது உதவி என்று வந்தால் தூக்கிக் கொடுத்து விடுவேன்” என்றாராம்.
அந்த நாடக நடிகரும், என்.எஸ். கேயின் கொடைத் தன்மையினைப் பார்த்து வியந்து நன்றி யுடன் பெற்றுச் சென்றாராம்.
வலக்கையில் எடுத்துக் கொடுக்கும் நேரத்திற்குள் மனம் மாறி விடுமோ என்று இடக்கையால் ஒருமுறை தானமளித்ததாக கர்ணன் பற்றிச் சொல்வார்கள். கொடைத்திறம் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருபவர் கர்ணன்தான்.
ஆனால் அவரையும் விடச் சிறப்பாக
தான் வறுமையில் ஆட்பட்ட நிலையாலும் தன்னிடமிருந்த பொருளெல்லாம் தீர்ந்து, நோயாளியாகப் படுக்கையில் படுத்திருந்த நேரத்தில் கூட தன்னால் இயன்றதைப் பிறர்க்குக் கொடுக்க வேண்டும் என்று கொடுத்தாரே அந்தக் கலைவாணர் மிகவும் உயர்ந்தவர்தானே.
கொடுப்பதால் உயரும் குணம்.
தளர்வுகளுடன் சில கட்டுப்படுகள் நமக்கு நாமே விதித்தால் தான்….
சில மகிழ்ச்சியான நிகழ்வுகள்….
நம்மையும் தேடி வரும் வாழ்க்கையில்.
சத்தியத்தில் சாத்தியமாகி விடுகிறது,
சிலரின் சரித்திரம் நிறைந்த வாழ்க்கை ..
ஒவ்வொரு நொடியும் உன் வாழ்க்கையில் வெற்றிக்காகப் போராடு…
*ஆனால் அந்த வெற்றியில் பிறரின் துன்பம் மட்டும் இருக்கவே கூடாது என்பதில் உறுதியாகச் செயல்படு. *
வாழ்க்கையில் கடினமான இலக்கை அடைய முயலுங்கள்!
*வென்றால் நீங்கள் வழி நடத்தலாம்! தோற்றால் நீங்கள் வழி காட்டலாம். *