இராமநாதபுரம்

பரமக்குடி: G.O.31 ரத்துக்கு எதிராக தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

பரமக்குடி: G.O.31 ரத்துக்கு எதிராக தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்லாத்தைத் தழுவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (B.C.M) என சாதிச்சான்றிதழ் வழங்க தமிழக அரசு 2024-ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பை கண்டித்து, பரமக்குடியில் இன்று 30.06.2026 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமுமுக மேற்கு மாவட்ட தலைவர் சேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தெற்கு மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் மற்றும் மத்திய மாவட்ட தலைவர் பிரிமியர் இபுராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் தமுமுக மாநிலத் துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் முகவை அக்பர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button