இராமநாதபுரம்தமிழ்நாடு

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வணிகவியல் பன்னாட்டு கருத்தரங்கம்

வணிகவியல் பன்னாட்டு கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் இணைந்து 03.01.2026 அன்று “சர்வதேச வணிக சந்தையில் செயற்கை தொழில்நுட்பம் மற்றும் சந்தை நிலைத்தன்மை” குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் கருத்தரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சீனா, குவாங்க்சி மின்சு பல்கலைக்கழகம், சினோ-பிரிட்டிஷ் கல்லூரி, கணக்கியல் மற்றும் நிதித்துறை, பேராசிரியர் சோணை சிங்காரம் ஜெயராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் உதவிப்பேராசிரியர் நசீர் கான் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வரவேற்றார். சிக்கிம், மணிப்பால் தொழில்நுட்ப கல்லூரி, கணிதவியல் மற்றும் புள்ளியில் துறை, இணைப்பேராசிரியர் பிரியங்கா தார் அவர்கள் இணையவழியில் பங்கேற்று பேசினார். ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இறுதியாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், உதவிப்பேராசிரியர் பௌசியா சுல்தானா நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button