தமிழ்நாடு
பொருளியல் கழக துவக்க விழா

பொருளியல் கழக துவக்க விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, பொருளியல் துறை சார்பாக 21.10.2026 அன்று பொருளியல் கழக துவக்க விழா நடைபெற்றது.
துறைத்தலைவி நர்கீஸ்பேகம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் மாரிமுத்து சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம், சேதுபதி அரசு கலை கல்லூரி, பொருளியல்துறை, இணைப்பேராசிரியர் மணிராஜு கலந்துகொண்டு சர்வதேச போர்களினால் பாதிக்கப்படும் இந்திய பொருளாதாரம் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறைசார் பேராசிரியர்கள் முகமது யாசின் மற்றும் கிரேன் குமார் ஆகியோர் செய்திருந்தனர் . உதவிப்பேராசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.






