வளைகுடா

துபாயில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி – க்ரீன் குளோப் அமைப்பு சிறப்பாக நடத்தியது

துபாயில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி – க்ரீன் குளோப் அமைப்பு சிறப்பாக நடத்தியது

துபாயில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி – க்ரீன் குளோப் அமைப்பு சிறப்பாக நடத்தியது

துபாய் :

தொடர்ந்து பல ஆண்டுகளாக பெண்களின் நலம், பாதுகாப்பு மற்றும் பொது முன்னேற்றத்தில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் க்ரீன் குளோப் அமைப்பின் சார்பில், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி PINK HOPE – Celebration of Life இன்று (அக்டோபர் 25) துபாய் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் உள்ள துபாய் பப்ளிக் லைப்ரரியின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியத்தை உணர்த்துவது மற்றும் மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பிரைம் மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களின் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம், மருத்துவ ஆலோசனைகள், உணவியல் நிபுணர்களின் ஆலோசனைகள் நடைபெற்றன. உணவியல் நிபுணர் முஜீபுர்ரஹ்மான், மகப்பேறு மருத்துவர் கியானி காஸ்டில்லோ ஆகியோர் ஆலோசனை வழங்கினர். புற்றுநோய் சிகிச்சையில் இருப்போருக்காக 4 கொடையாளர்கள் தலைமுடி தானம் செய்தனர்.

மேலும், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை வலியுறுத்தும் சுவரொட்டி போட்டிகள், முக ஓவியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தலைமை விருந்தினர்களாக போஹோ குரூப் நிறுவனர் சுசித்ரா குமார், ஷார்ஜா எட்டிசலாத் நிதித்துறையின் முன்னாள் தலைவர் கதீஜா இப்ராஹிம், ள் துபாய் சேம்பர் எக்ஸலன்ஸ் மேலாளர் அஸ்மா இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக நாஷ் பெர்ஃப்யூம் ராபியா தாரிக், மோட்டிவேஷன் பேச்சாளர் சபீன் ஜாவிட், மூத்த பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், சலாலா ஸ்டேஷனரி நிறுவனர் ஜாஃபர் அலி, இமான் அமைப்பின் செயலாளர் யாசின், தனியார் நிறுவன தலைமை மேலாளர் மணவாளன், பிசினஸ் அட்வைசர் அஸம் பாஷா, ஜபீர், கேப்டன் டிவி கமால், தினக்குரல் நஜீம், சாம்கோ நிறுவனர் சமீர் அகமது, 2FA நிறுவனர் ஷாஹீத் ரஹ்மான், ப்ளசன்ட் டூர்ஸ் நிறுவனர் மாஜிதா பேகம், ஸலாலா ஸ்டாம்ப் நாசர், ஜெயச்சந்திரன் பிட்ஸ் பிளானி, கவிஞர் சிவமணி, பீமா சிராஜ், பாசிலா,
ஜெஸிலா நவுபல், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை க்ரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்களான சுலோச்சனா வீரகுமார், ரசூல், தாஹிர், அப்துல் ரஹ்மான், ஹபீப் அபூபக்கர்
சாபீர், மற்றும் பீர் முஹம்மது ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியை விவர்தினி வீரகுமார் நெறியாள்கை செய்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய துபாய் பொது நூலக நிர்வாகத்தினர், மருத்துவர்கள், சிறப்பு விருந்தினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் க்ரீன் குளோப் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button