தட்டானேந்தல் நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் ஆய்வு

தட்டானேந்தல் நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் ஆய்வு

முதுகுளத்தூர் :
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகேயுள்ள தட்டானேந்தல் நூலகத்தை மாவட்ட நூலக அலுவலர் கார்ல் மார்க்ஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
தட்டானேந்தல் கிளை நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் நூலக வளர்ச்சிப் பணிகள் குறித்து நூலகர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக நூலகர் பொறுப்பு வகிக்கும் கோ. சண்முகவேலு வரவேற்றார்.
நூலக வளர்ச்சியின் நலன் கருதி அந்த பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, தாமரைக்கண்ணன், வடிவேல் முருகன், சிவலிங்கம், ஆனந்த், ரகுவிகாஷ், பணி நிறைவு நூலகர் சுடலைக்கண்ணு உள்ளிட்ட 7 பேர் தலா ரூ. 1000 செலுத்தி மாவட்ட நூலக அலுவலர் முன்னிலையில் தங்களை புரவலர்களாக இணைத்துக் கொண்டனர்.
மேலும் அதிக புரவலர்களை இணைக்க நூலகர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் அறிவுறுத்தினார்.
வாசகர்கள், பள்ளி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் புத்தகங்களை இருப்பு வைக்க உத்தரவிட்டார்.
வாசகர் வட்ட செயலாளர் வே. அரியமுத்து நன்றி கூறினார்.







