கீழக்கரை நகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதல் கட்ட வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

கீழக்கரை நகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதல் கட்ட வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதல் கட்டமான வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான வழிகாட்டுதல் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி முன்னிலையில் நடைபெற்றது
இந்த பயிற்சியில் வீடுகளை கணக்கெடுக்கும் முறை, கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யும் வழிமுறை, டிஜிட்டல் செயலியை பயன்படுத்துவது மற்றும் களப்பணியின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது.
ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் வீடுகள் கணக்கெடுப்பு பணியின் போது கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களை நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளனர்




