இராமநாதபுரம்

இராமநாதபுரம் SDPI கட்சி செயற்குழு கூட்டம்

இராமநாதபுரம் SDPI கட்சி செயற்குழு கூட்டம்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ் டி பி ஐ கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமை தாங்கினார் எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் ஜெமிலு நிஷா அனைவரையும் வரவேற்றார்

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

கூட்டணி குறித்தான தலைமையின் முடிவு வெளியிட்டவுடன் தேர்தல் பணிகளை தலைவர்கள் முதல் செயல் வீரர்கள் வரை முடுக்கி விட தயாராக வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது

வெளியான புதிய வாக்காளர் பட்டியலை BLA மற்றும் BLC BDA பொறுப்பாளர்கள் ஆய்வு செய்திடவும் நமக்கான வாக்குகளை அறுவடை செய்ய முழு அளவில் தயாராகிவிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது

இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் சாலையோர வியாபாரிகளை நசுக்குவதை அவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் ஆக்குவதை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறுத்திட வேண்டும் அதே போன்று அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு முறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் தீட்டப்பட்டு அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற முயற்சிகள் நிலைபெற வேண்டும் என தமிழக அரசிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் வலியுறுத்தியும் தேர்தல் காலம் என்பதை மனதில் கொண்டு ஆளும் அரசுக்கு அதிக கெட்ட பெயரை ஏற்படுத்துவதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் புதிய மீன் மார்க்கெட் கான நிதி ஒதுக்கப்பட்டும் இன்னும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது கீழக்கரை மக்களை கவலை அடைய வைத்துள்ளது உடனடியாக புதிய மீன் மார்க்கெட் கட்டும் பணிகளை துரித படுத்திட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

புதிய பேருந்து நிலையத்துக்கு வருகை புரியும் பேருந்துகளுக்கு வேக கட்டுப்பாடுகள் அவசியம் அதிக வேகத்தினால் புதிய இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் நான்கு உயிர்கள் பலியாகி உள்ளன இதை கவனத்தில் வைக்க வேண்டும் எனவும் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இருக்கைகள் அமைத்து கொடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இந்த நிகழ்வில், கட்சியின் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், மாவட்டச் செயலாளர் அப்துல் மஜீத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நஜ்முதீன், நவ்வர்சா, சோமு, வழக்கறிஞர் அப்துல்லா, இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மைதீன், திருவாடனை சட்டமன்ற தொகுதி தலைவர் முகமது ஹனீப், வர்த்தக அணி மாவட்ட தலைவர் நூருல் ஜமான், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முகமது நதீம், மகளிர் அணி மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம், SDTU தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் முஹம்மது ஆசாத், மீனவர் அணி மாவட்ட தலைவர் பக்ருதீன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்டத் தலைவர் கீழை அஸ்ரப், கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் முகமது இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இறுதியாக கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொது செயலாளர் முகமது சுலைமான் நன்றியோடு நிறைவுற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button