இராமநாதபுரம்

எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் BLA2 முகவர்கள் நியமனம் !

எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் BLA2 முகவர்கள் நியமனம் !

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துரில் நடைபெற்ற மாவட்ட மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம்
SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட தலைவர் நூருல் அமீன் அவர்கள் தலைமையில் முதுகுளத்தூர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர் அவர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்று நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் போகலூர் செய்யது இப்றாகிம் , மாவட்ட செயலாளர் கன்சுல் மஹரிபா ஆலிமா, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி தலைவர் முஹம்மது ரபீக் , செயலாளர் சத்தார் மைதீன் , பரமக்குடி சட்டமன்ற தொகுதி தலைவர் முஹம்மது யாக்கூப் ரிஸ்வான் , செயலாளர் நவாஸ் ஷரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

களத்தைதயார்செய்வோம் !
2026ல்_வெல்வோம்
என்ற முழக்கத்தோடு துவங்கப்பட்டுள்ள SDPI கட்சியின் தேர்தல் பணிகளின் அடுத்த கட்டமாக டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள BLA2 மாநாட்டில், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் முதற்கட்டமாக 500 BLA2 முகவர்களை கலந்து கொள்ளச் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button