துபாயில் கவிஞர் இரா. இரவி எழுதிய ‘மாண்புமிகு மனைவி’ நூல் வெளியீடு

துபாயில் கவிஞர் இரா. இரவி எழுதிய ‘மாண்புமிகு மனைவி’ நூல் வெளியீடு

துபாய் :
துபாய் தர்பார் மீடியா அலுவலகத்தில் வளைகுடா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மதுரை கவிஞர் இரா. இரவி தனது மனைவி குறித்து எழுதிய ‘மாண்புமிகு மனைவி’ நூல் வெளியீட்டு விழா நடந்தது.
வளைகுடா தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் ஆ.முகம்மது முகைதீன் ‘மாண்புமிகு மனைவி’ நூலை வெளியிட முதல் பிரதியை பொதுச் செயலாளர் முதுவை ஹிதாயத் முதல் பிரதியை பெற்று கொண்டார்.
அப்போது பேசிய முனைவர் முகம்மது முகைதீன், கவிஞர் இரா. இரவி தனது மனைவியுடன் வாழ்ந்த வசந்த காலம் தொடங்கி இறந்த துயரக் காலம் வரை எல்லாவற்றையும் நினைவு கூர்ந்திருக்கிற, அவரது உள்ளம் வெளிப்படுத்தியுள்ள வருத்தத்தின் வெளிப்பாடே இந்த நூல் என்றார்.
விழாவில் துபாய் தர்பார் மீடியா இயக்குனர் சொக்கம்பட்டி கபீர், மயிலாடுதுறை கிருஷ்ணன், ரகுவரன், இலங்கை திருமாறன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.



