அதிரடி காட்டும் பரமக்குடி டிஎஸ்பி! ஒரே மாதத்தில் 18 வழக்குகள் – 11.6 கிலோ கஞ்சா பறிமுதல்
அதிரடி காட்டும் பரமக்குடி டிஎஸ்பி! ஒரே மாதத்தில் 18 வழக்குகள் – 11.6 கிலோ கஞ்சா பறிமுதல்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிஎஸ்பி ஜாபர் சித்திக் பொறுப்பேற்ற கடந்த ஒரே மாதத்தில் மட்டும் பரமக்குடி காவல் துறையினர் 18 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் 11.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைதான நபர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்பில் தீவிர நடவடிக்கையாக, கஞ்சா விற்பனையாளர்கள் மீது தொடர் கண்காணிப்பு நடத்தி வருவதாகவும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறு டிஎஸ்பி ஜாபர் சித்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.



