தடகள போட்டிகள்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குறுவட்டார அளவிலான தடகள போட்டிகள் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியினை மாவட்ட கல்வி அலுவலர் திரு சங்கர் மற்றும் நகர்மன்ற தலைவர் திரு சேதுகருணாநிதி ஆகியோர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி துவக்கி வைத்தனர். இப்போட்டியில் 14,17,19 வயது பிரிவுகளில் மாணவர்களுக்கான 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர், 3000 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சிறப்பு கௌரவ அழைப்பாளர்களாக உடற்கல்வி இயக்குனர்கள் ராஜசேகர்,அனிதா, உடற்கல்வி ஆசிரியர் பூமி ராஜா, தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் மற்றும் இயக்குனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.





