இராமநாதபுரம்
இரட்டை கொலையால் ராமநாதபுரத்தில் பரபரப்பு: கணவர் கைது

இரட்டை கொலையால் ராமநாதபுரத்தில் பரபரப்பு: கணவர் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக நடந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்த மாமியார் மற்றும் மனைவியை செல்லமுத்து என்பவர் வெட்டி கொலை செய்துள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவரையும் கொன்றுவிட்டு செல்லமுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரணடைந்த செல்லமுத்துவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




