நாகம்பட்டி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு முகாம்

நாகம்பட்டி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு முகாம்
நாகம்பட்டி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு முகாம்

நாகம்பட்டி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அணி எண் 195 சார்பில் அச்சங்குளம், கோவிந்தம்பட்டி, கீழமங்கலம், நாகம்பட்டி, பசுவந்தனை கிராமங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றன. கல்லூரியின் நலப்பணித் திட்ட அலுவலர் & முகாம் ஒருங்கிணைப்பாளர் பவானி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முருகானந்தம் முகாமை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். பெண்கள் & குழந்தைகள் பாதுகாப்பு, குடி நீர், மரம் வளர்த்தல், சுகாதாரம், எரிசக்தி, உயிர் உரம் & கரிம உரம் தயாரித்தல், பிளாஸ்டி ஒழிப்பு, முதியோர் நலம், கிராம முன்னேற்றம் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் அலுவலர் ராஜேஸ்வரி, ஓட்டப்பிடார வேளாண்மைத் துறை உதவி தொழில் நுட்ப மேலாளர் செல்வக்குமார், உடற்கல்வி இயக்குநர் கணேசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பவானி, தமிழ்த்துறைத் தலைவர் சேதுராமன் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் கிராம மக்களிடம் பேசினர். நாகம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கினார். கிராம ஊராட்சி அலுவலக உதவியாளர்கள் ராஜிவ்காந்தி, சமுத்திரக்கனி, செந்தூர்பாண்டி, தங்கத்தாய், ஆவுடைத்தாய் & ஐந்து கிராம மக்கள் 450 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமின் இணை ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் நன்றி கூறினார்..






