ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வீடுகள் மற்றும் கோடவுனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வீடுகள் மற்றும் கோடவுனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சாயல்குடி மாதவன் நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 12 கிலோ எடையுள்ள மூன்று மூடைகளில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், பூப்பாண்டியபுரத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து குட்கா வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பழைய இரும்பு கோடவுனில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கு அதிகளவில் குட்கா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மினி லாரி, இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தமாக 300 கிலோ குட்கா, ரூ.1.49 லட்சம் ரொக்கம் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 4 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரின் பெயர்கள்:
வடிவேல் முருகன் (40) – சாயல்குடி, மாதவன் நகர்
கோட்டைச்சாமி (45) – பூப்பாண்டியபுரம்
முனீஸ்வரன் (35) – சதுரகவள்ளி நகர்
கோபால் (45) – நரிப்பையூர்
வழக்கை சாயல்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரித்து வருகிறார்




